
கள்ளக்குறிச்சி: ஏப்ரல் 3-
தேர்தல் களத்தில் மாமனாவது, மச்சானாவது! உறவு வேறு, அரசியல் வேறு. எனக்கு கொள்கையே முக்கியம்” என்று கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், பாமக தலைவர் அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணு பிரசாத் ஆவேசமாக பேசினார்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் தீவிர பிரச்சாரம் செய்தார்.
போர்க்களத்தில் மாமனாக இருந்தாலும், மச்சானாக இருந்தாலும் சுடு என்ற அர்ஜுனன் சொன்னபோது, குறிதவறாமல் சுடுவதுதான் என் வேலை.
எனக்கும் அப்படித்தான் கூட்டணிக் கட்சியினர் சொல்லிக் கொடுக்கின்றனர். அதை நான் செய்கிறேன். ஏனென்றால் எனக்கு கொள்கைதான் முக்கியம் என்று அவர் சொன்னார்.

