
செ வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 3- மலேசிய இளம் ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி தொடர்ந்து முன்னேற வேண்டும் , ”மீண்டும் ஒருமுறை, வாழ்த்துக்கள்!
மேலும் இந்த வெற்றி எதிர்காலத்தில் மேலும் வெற்றியை ஊக்குவிக்கட்டும்” என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் உலகின் 2ஆம் நிலை வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமியை வீழ்த்தி லண்டன் கிளாசிக் பட்டத்தை வென்ற எஸ்.சிவசங்கரிக்கு பிரதமர் உட்பட ஒட்டுமொத்த மலேசியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

