
கோலாலம்பூர் ஏப்ரல் 3-
அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் SDSI எனப்படும் தொழில்துறை திட்டங்கள் உருவாக்கப்படும் என்று தொழில் முனைவர் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ இரமணன் தெரிவித்தார்.
ஒரு மாவட்டத்தின் அடையாளத்துடன் தனித்துவமான தயாரிப்புகளை உருவாக்குவதோடு அங்குள்ள மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்படும்.
புறநகர் பகுதியில் வசிக்கும் மக்களை தொழில் முனைவோர் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு நிறுவனங்களின் உதவியோடு அமைச்சு பல திட்டங்களை வகுத்திருப்பதாக அவர் நேற்று மேலவையில் கேள்வி நேரத்தின் போது இதனைத் தெரிவித்தார்.
- பெர்னாமா

