
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜசெக துணை தலைவர் கோபிந்த் சிங் டியோ இம்முறை டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜொகூர் பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் இம்முறை பூச்சோங் தொகுதியில் போட்டியிடுகிறார்.
டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டோனி புவா இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கி கொண்டுள்ளார்.
அந்த வகையில் டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில் பிரபல வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

