குறைக்க மலேசியா இலக்கு

சமூகத் திருத்தங்களின் வாயிலாக அடுத்த எட்டு ஆண்டுகளில் சிறைவாசிகளின் எண்ணிக்கையை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க மலேசியா இலக்கு வைத்துள்ளது.
சமூகத் திருத்தங்களில் அதிக கவனம் செலுத்துவது, சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் கடுமையான குற்றங்கள் அல்லாத குற்றவாளிகளின் மறுவாழ்வை மேம்படுத்துவது ஆகியவை மலேசியாவின் திட்டங்களில் ஒரு பகுதியாகும்
என்று மலேசிய சிறைத் துறை தலைமை ஆணையர் டத்தோ நோர்டின் முகமது தெரிவித்தார்.

