இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை தீர்க்க அமைச்சரவையில் சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்!

செ.வே. முத்தமிழ் மன்னன்

நாட்டில் மித்ராவை விட இந்திய சமுதாயத்திற்கு பெரிய பிரச்சினைகள் உள்ளது.
அதனை பிரதமர் கவனிக்க வேண்டும் என்று விலாயா மாநில மைபிபிபி கட்சியின் தலைவர் சத்தியா சுதாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய சமுதாயம் மற்ற சமூகங்களுக்கு ஈடாக வர வேண்டும் என்றால் அதற்கு தனி அமைச்சும் மானியமும் ஒதுக்கப்பட வேண்டும்.

மேலும் அமைச்சரவையின் கீழ் சிறப்பு குழு அமைக்க வேண்டும். அதில் அனைத்து தரப்பினரும் இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகளை இடமாற்றம் செய்வது, குடியுரிமை பிரச்சனை, கோவில் மற்றும் இந்து ஆலயங்களுக்கு மானியம், மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்கல்விக் கூடங்களில் இடப் பிரச்சினை உட்பட பல முக்கிய பிரச்சனைகளை இந்திய சமுதாயம் காலம் காலமாக எதிர்நோக்கி இருக்கிறது

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் அமைச்சரவையின் கீழ் சிறப்பு இந்தியர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவருமான அவர் சொன்னார்.

மேலும் முன்பு டத்தோஸ்ரீ நஜிப் பிரதமராக இருந்த போது இந்தியர்களுக்காக புளு பிரிண்ட் உருவாக்கினார். அது தொடரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles