
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 5-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறும் வேளையில் வாக்களிப்பு வரும் மே 11 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இப்போது கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களைக் கட்டியிருக்கிறது.கடந்த 2023 இல் நடைபெற்ற தேர்தலில் ஜசெக வேட்பாளர் லீ கீ ஹோங் 14,862 வாக்குகள் பெற்று 4,119 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட கெராக்கான் வேட்பாளர் தியோ கியான் ஹோங் 10,743 வாக்குகள், மூடா வேட்பாளர் டாக்டர் சிவப்பிரகாஷ் இராமசாமி 1,186 வாக்குகள் மற்றும் பிஆர்எம் வேட்பாளர் சான் பூன் லாய் 527 வாக்குகள் பெற்று தோல்வி கண்டனர்.
ஆனால் இம்முறை இடைத்தேர்தலில் எந்த கட்சியும் எளிதில் வெற்றி பெற முடியாது. பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இடையே போட்டி மிகவும் கடுமையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் மீண்டும் இந்தத் தொகுதியில் கெராக்கான் வேட்பாளர் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.