புனித நோன்பு மாதத்திலும் உலுலங்காட் மைபிபிபி கட்சியின் உதவிகள் தொடர்கிறது!

செ.வே. முத்தமிழ் மன்னன்

காஜாங், ஏப்ரல் 5-
புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் மைபிபிபி கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் மனிதநேய அடிப்படையில உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மைபிபிபி உலுலங்காட் தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் இன்று காஜாங் மாவட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்கள் நோன்பு திறக்க உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

புனித நோன்பு மாதத்திலும் காவல் துறையினர் நேரம் தவறாமல் சிறப்பான முறையில் கடமையாற்றி வருகிறார்கள் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

உலுலங்காட் மைபிபிபி கட்சி கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக நோன்பு மாதத்தில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், வசதி குறைந்த மக்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி இருப்பதாக சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் உதவித் தலைவருமான டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles