நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது!

(காளிதாஸ் சுப்ரமணியம்)

கெப்போங், ஏப்ரல் 6-
முஸ்லிம் பெருமக்கள் இன்னும் சில தினங்களில் நோன்பு பெருநாளை கொண்டாடவிருக்கும் வேலையில் Pertubuhan Kebajikan Revolusi Teguh Infiniti Malaysia இயக்கம் நேற்று வசதி குறைந்த 250 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி பேருதவி புரிந்தது.

Pertubuhan Kebajikan Revolusi Teguh Infiniti Malaysia இயக்கத்தின் ஏற்பாட்டில் கெப்போங் அமானியா பள்ளிவாசலில் வழங்கிய இந்த உணவு கூடைகள் வசதி குறைந்த மக்களின் சுமையை குறைக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனிடையே நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கெப்போங் காவல் நிலையத்தின் தலைமை காவல் அதிகாரி முகமட் ஃபாடில் பின் அப்துல் வாஹாப், அமானியா பள்ளிவாசலின் தலைமை இமாம் அப்துல் ராஹிம் மாஜீத் ஆகிய இருவரும் கலந்து கொண்டு மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கினார்கள்.

வசதி குறைந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்பாடு செய்வதற்கு வெ.25,000 செலவு செய்திருந்ததாகவும் இதற்கு பேருதவியாகவும் துணையாகவும் இருந்த இயக்கத்தின் துணைத் தலைவர் இராஜ ரத்தினம் அன்பரசனுக்கு இயக்கத்தின் தலைவர் பார்த்திபன் அடக்கப்பச்சி நன்றியை தேரிவித்துக் கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை அமானியா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்வதற்கு அலி கான் பெரிதும் உதவியாக இருந்தார்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெறுவதற்கு துணை நின்ற இயக்கத்தின் உறுப்பினர்களுக்கும் கெப்போங் தலைமைக் காவல் அதிகாரிக்கும் அமானியா பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் பார்த்திபன் நன்றி கூறினார்.

புஉணவு கூடைகள் பெற்றுக் கொண்ட மக்கள் Pertubuhan Kebajikan Revolusi Teguh Infiniti Malaysia இயக்கத்திற்கு நன்றியை புலப்படுத்திக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles