ம.இ.கா. தேசிய இளைஞர் தலைவர் பதவிக்கு அர்விந்த் போட்டி! – துணைத் தலைவருக்கு கேசவன் போட்டி!

(காளிதாஸ் சுப்ரமணியம்)
(மா.பவளச்செல்வன்)

கோலாலம்பூர் ஏப்ரல் -7

நடக்கவிருக்கும் 2024-2027 தவனைக்கான ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்கு அர்விந்த் கிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

நமது ஒற்றுமையே நம் பலம் என்பதை தலைமை எங்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். ம.இ.காவின் தலைமையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் டத்தோஶ்ரீ சரவணன் எப்படி ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் இருப்பதைப் போல ம.இ.கா இளைஞர் பிரிவும் இருக்க வேண்டும்.

அந்த வகையில் நீண்டகாலமாக ம.இ.கா இளைஞர் பிரிவில் சேவையாற்றி வரும் நானும் , அண்ணன் கேசவன் கந்தசாமியும் இந்த முறை தலைமை பொறுப்புக்கு வர நினைத்த போது இருவரும் தங்களது விருப்பத்தைக் கலந்து பேசிணோம்.

இருவரும் இணைந்தே பயணிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்தோடு அண்ணன் கேசவன் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை தனக்காக விட்டுக் கொடுத்தார் என்று அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

அந்த வகையில் தாம் இம்முறை நடக்கும் ம.இ.கா தேசியத் இளைஞர் பிரிவு தேர்தலில் மாநில இளைஞர் பிரிவின் ஆசியுடன் போட்டியிடுவதாக அர்விந்த் கிருஷ்ணன் இன்று அறிவித்தார்.

அர்விந்த் பேசியதை தொடர்ந்து கேசவன் கந்தசாமி நானும் அர்விந்த் கிருஷ்ணனும் நீண்ட காலமாக ம.இ.காவில் பயணிக்கிறோம். பல இளைஞர் பிரிவு தலைவர்களுடனும் பயணித்து அனுபவம் பெற்றிருக்கிறோம்.

ம.இ.கா தலைமை போல் இளைஞர் பிரிவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தம்பி அர்விந்த் கிருஷ்ணனுக்கு துணையாக கேசவன் கந்தசாமி தான் இம்முறை ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் துணைத் தலைவருக்கு போட்டியிட போவதாக அறிவித்தார்.

இவர்களை தவிர இளைஞர் பிரிவில் வேறு யாரேனும் போட்டியிடுகிறார்களா என பத்திரிக்கையாளர் சத்திப்பில் அர்விந்த் கிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது.

இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்த கேசவன் இளைஞர் பிரிவின் ஒற்றுமைக்காக விட்டு கொடுத்துவிட்டார்.

வேறு யாராவது போட்டி போடுவார்களா என்பது எங்களுக்கு தெரியவில்லை . தேர்தல் நேரத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும். எங்கள் இருவரின் விருப்பத்தை நாங்கள் இன்று மாநில இளைஞர் பிரிவை அழைத்து தெரிவித்திருக்கிறோம் என்றார் அர்விந்த்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles