மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தி மறைவு திமுகவுக்கு பேரிழப்பு” – முதல்வர் ஸ்டாலின்

“நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், புகழேந்தி நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.” என்று விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், “விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.
ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் திமுக தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
_ The hindu tamil

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles