கம்போங் காசி பிள்ளையில் ஹோலி பண்டிகை விழா விமரிசையாக நடைபெற்றது

செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 6-
தலைநகர் கம்போங் காசி பிள்ளையில் இன்று பிற்பகலில் ஹோலி பண்டிகை விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மஞ்சள் நீராட்டு விழாவை போல் ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களை தூவி, முகத்தில் தடவி சந்தோஷமாக கொண்டாடினர்.

இம்முறை எதிர்பார்த்ததை காட்டிலும் மக்கள் கூட்டம் வெள்ளம் போல் காட்சியளித்தது.

விழா மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிந்ததாக விழா ஒருங்கிணைப்பாளர் கவிதா சர்மா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles