நோன்புப் பெருநாளில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் பணியில் 10,000 டி.என்.பி. ஊழியர்கள்!

கோலாலம்பூர் ஏப்ரல் 8-
நோன்புப் பெருநாளின் போது சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக தீபகற்ப மலேசியா முழுவதும் 11 மாநிலங்களில் சேவைச் சங்கிலியில் உள்ள கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை தெனாகா நேஷனல் பெர்ஹாட்(டி.என்.பி.) பணியில் ஈடு படுத்தும்.

நோன்புப் பெருநாளுக்கான ஏற்பாடுகளில் பொது மக்கள் மும்முரமாக ஈடுபடுவர் என்பதால் பெருநாளுக்கு முன்னதாக அதாவது 1 ஷியாவாலுக்கு முந்தைய நாள் தொடங்கி 72 மணி நேரத்திற்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று டி.என்.பி. தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ மெகாட் ஜலாலுடின் மெகாட் ஹசான் கூறினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles