நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகள் அன்பளிப்பு

செ.வே.முத்தமிழ்மன்னன்

சுங்கை சிப்புட், ஏப்ரல் 9-
பேராக் மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான ஜாலோங் சட்டமன்றத்தை சார்ந்த 200 வசதி குறைந்த குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு உணவு கூடைகள் வழங்கப்பட்டது.

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு லோ சீ யீ அவர்கள் இந்த உணவு கூடைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வு ஜாலோங் சட்டமன்ற சேவை மைய ஊழியர்கள் மற்றும் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினரால் நியமிக்கப்பட்ட கிராமத் தலைவர்கள் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்களால் கம்போங் தெர்சூசுன் கெலெடாங் மற்றும் கம்போங் ஜாலோங் ஆகிய இரு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டதென ஜாலோங் சட்டமன்ற உறுப்பினரின் இந்தியர் நலப்பிரிவு அதிகாரியும், கோலாகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினருமான திரு. கோபி அவர்கள் விளக்கினார்.

மேலும், ஜாலோங் சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய மலாய் மற்றும் பூர்வக் குடியினர் கிராமங்களில் வாழும் வசதி குறைந்த குடும்பங்களை அக்கிராம தலைவர்களின் வாயிலாக கண்டறிந்து, அவர்களுக்கு பேராக் மாநில அரசாங்கத்தின் வழி இந்த உணவு கூடைகள் வழங்கப்பட்டன எனவும் திரு. கோபி அவர்கள் கூறினார்.

நோன்புப் பெருநாளின் போது வசதி குறைந்த குடும்பங்களின் சுமையை குறைக்க இதுபோன்ற பேராக் மாநில அரசின் உதவிகள் பெரிதும் உதவுகின்றன என்று மாண்புமிகு லோ சீ தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles