
(காளிதாஸ் சுப்ரமணியம்)
சுங்கை பூலோ, ஏப்ரல் 9
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு சுங்கை பூலோ தொகுதி மக்களுடன் பங்கேற்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இரமணன் வசதி குறைந்தவர்களுக்கு உணவு கூடைகளையும் அன்பளிப்புகளையும் வழங்கினார்.
சுங்கை பூலோ அம்னோ டிவிஷன் தலைவர் டத்தோ மெகாட் பிர்டாவூஸ் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
நோன்பு பெருநாள் காலத்தில் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு டத்தோ இரமணன் பல வகைகளில் உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

