தெலுங்கு உகாதி புத்தாண்டை முன்னிட்டுபத்துமலை வெங்கடாசலபதி ஆலயத்தில் சிறப்பு பூசை!சுரேஸ் சிங் சிறப்பு வருகை

(காளிதாஸ் சுப்ரமணிம்)

பத்துமலை, ஏப்ரல் 9-
தெலுங்கு உகாதி புத்தாண்டை முன்னிட்டு மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பத்துமலை திருத்தலத்தில் உள்ள வெங்கடாசலபதி ஆலயத்தில் சிறப்பு பூசை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கட் பிரதாப், துணை தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூசையில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய பிரமுகராக கலந்து கொண்ட டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் சிறப்பு அதிகாரி மாண்புமிகு சுரேஷ் சிங்கிற்கு மலேசிய தெலுங்கு சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

உகாதி புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூசைகள் மற்றும் கலை கலாசார நடனங்கள் இடம் பெற்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles