
சென்னை: சென்னை என் மனதை வென்றது என சென்னையில் நடைபெற்ற வாகன பேரணி குறித்து பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டின் பக்கம் தேசிய தலைவர்களின் பார்வை திரும்பியுள்ளது.
அந்த வகையில் பாஜ மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து மோடி வந்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்கள் தரும் ஆதரவு எனக்கு மேலும் வலுவைத் தருகின்றது; சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், பாஜ கூட்டணிக்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர் என்பதையே காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்
The hindi tamil.

