
மா. பவளச்செல்வன்
தஞ்சோங் மாலிம், ஏப்ரல் 11-
உகாதி புத்தாண்டை முன்னிட்டு தஞ்சோங் மாலிம் நோக்கலாமா ஆலயத்தில் சிறப்பு பூசைகளுடன் திருக்கல்யாணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
ஆலய தலைமை குருக்கள் சிவஸ்ரீ ராமலிங்க குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த திருக்கல்யாண வைபவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் உகாதி புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆலயத்தில் திருக்கல்யாணம் விமர்சையாக நடத்தப்பட்டு வருவதாக சிவ ஸ்ரீ ராமலிங்க குருக்கள் தெரிவித்தார்.
திருக்கல்யாண உபயத்தை ஸ்ரீ மஹா மாரியம்மன் தாமன் முஹிபா ரவாங் ஆலயத் தலைவர் டத்தோ சுரேஷ் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

