
நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.
மூன்றாம் தர நிலையில் உள்ள நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார்.
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் உள் கட்டமைப்பு வசதிகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக அவரின் இந்த வருகை அமைந்தது.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்லி மற்றும் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

