கோலகுபு பாருவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்!

காளிதாஸ் சுப்ரமணிம்

பத்தாங் காலி,ஏப்ரல் 13-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகலில் கோலகுபு பாருவுக்கு வருகை புரிந்தார்.

கோலகுபு பாருவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வருகை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக
உலு சிலாங்கூர் பண்டார் உத்தாமா பத்தாங் காலி பள்ளிவாசலில் மக்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டார்.

பின்னர் நடைபெற்ற நோன்பு பெருநாள் பொது உபசரிப்பிலும் அவர் கலந்து கொண்டார்.

சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் தாயிப் ,உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், பிரிஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜவஹர் அலி, உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து உட்பட ஏராளமானோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

டத்தோ ஜவஹர் அலி 500 பேருக்கு சுவையான உணவுப் பொட்டலங்களை வழங்கி பேருதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles