
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 13-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் ஒரு மூத்த அரசியல்வாதி ஆவார்.
ஙா கோர் மிங் போன்ற முட்டாள் தனமான அமைச்சர்களால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக செயல்படுகிறது என்று
அம்னோ இளைஞர் அணி தலைவர் டாக்டர் அக்மால் கூறியிருப்பது சரியல்ல.
நம் நாட்டிற்கு முக்கியமானது ஒற்றுமை .
அந்த வகையில்
இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை சிதைக்கக் கூடாது
இன நல்லிணக்கத்திற்காக அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும்.
அம்னோ இளைஞர் அணி தலைவர் டாக்டர் அக்மால் மற்றவர்களை சுட்டிக் காட்டும் போது நல்ல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

