
சிரம்பான் வட்டாரத்தில் அனைத்து இடங்களிலும் குப்பை கொட்டுவதை கண்காணிக்க சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது என்று நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ அருள் குமார் தெரிவித்தார்.
நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்! வாகன கண்ணாடிகள், பொது இடங்கள் மற்றும் சட்டவிரோத குப்பைகள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் குப்பைகளை வீசும் ஒவ்வொரு செயலும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்.
இந்த CCTV கேமிரா போக்குவரத்து விளக்கு சந்திப்புகள், சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்களில் கவனம் செலுத்துகிறது.
இதன் வழி ஊராட்சி மன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
சட்டம் 672 இன் பிரிவு 71 இன் கீழ் RM 10,000 முதல் RM 100,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அவர் சொன்னார்.

