
செ.வே. முத்தமிழ் மன்னன்
பினாங்கு, ஏப்ரல் 14-
புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அப்பள்ளி பாராட்டு விழாவிற்கு வருகைப் புரிந்தேன்.
பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே மேலோங்கி நிற்கும் மாணவர்களின் வெற்றியை கொண்டாட வேண்டும் என்ற உணர்வு என்னை மெய்சிலிர்க்க செய்தது என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.

நம்மிடையே, காணப்படும் இந்த ஒற்றுமையுணர்வு நமது எதிர்கால சமுதாயத்திற்கு வெற்றிக்கான முதல்படியாக விளங்கும் என்றால் மிகையாகாது என்று அவர் சொன்னார்.

