
இந்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலம் பக்கத்தான் ஹரப்பான் கோட்டையாக மாற்றுவோம்.
சிலாங்கூரில் உள்ள எல்லா நாடாளுமன்ற தொகுதிகளில் பக்கத்தான் ஹரப்பானின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கோலசிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவர் தீபன் சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோலசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் அமானா கட்சி சார்பில் டாக்டர் சூல்கிப்லி போட்டியிடுகிறார்.
இவர் மிகச் சிறந்த சேவையாளர். தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்கி இருக்கிறார்.
இவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று தொகுதி மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

