
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில்
மஇகா மகளிர் அணி தலைவி மோகனா முனியாண்டி போட்டியிடலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த தேர்தலில் கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் கெஅடிலான் கட்சியிலிருந்து விலகிய அவர் பார்ட்டி பங்சா மலேசியா கட்சியில் இணைந்தார்.
இம்முறை கெஅடிலான் கட்சி சார்பில் அதன் உச்சமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
தேசிய முன்னணி சார்பில் மோகனா முனியாண்டி நிறுத்தப்படுவாரா என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்து விடும்.

