புந்தோங் சட்டமன்றத் தொகுதியில்
களம் இறங்குகிறார் துளசி மனோகரன்

பேராக் மாநிலத்தில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் துளசி மனோகரன் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுக் இந்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான மனோகரனின் புதல்வியான துளசி மனோகரன் சிறு வயது முதல் ஜசெக போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்.
இம்முறை புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக புந்தோங்கில் மக்கள் சேவையாற்றி வரும் துளசி மனோகரன் ஒரு போராளி என்பதால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிட்டியுள்ளது.

