
கெஅடிலான் கட்சி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்முறை பேராக் மாநிலத்தில் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நேற்று காலை முதல் மாலை வரை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்பூனில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் அராபாட் தலைமையில் நடைபெற்ற தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் முழு ஆதரவு வழங்கினர்.
மேலும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இம்முறை பேராக் மாநிலத்தையும் கைப்பற்றும் வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்பூனில் களம் இறங்கி உள்ளார்.

மேலும் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் ஆட்சி அமைக்க கூடுதல் நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்ற இலக்கு வைத்திருக்கிறது

