
தேசிய முன்னணி சார்பில் மொத்தம் பத்து நாடாளுமன்ற தொகுதியில் ம இகா போட்டியிடுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெடா பாடாங் செராயில் டத்தோ சிவராஜா, தெலுக் இந்தானில் டத்தோ முருகையா, தாய்ப்பாலில் டத்தோஸ்ரீ சரவணன், சுங்கை சிப்புட்டில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், கோத்தா ராஜா வில் கஜேந்திரன், உலு லங்காட்டில் மோகனா முனியாண்டி, உலு சிலாங்கூரில் டத்தோ டி மோகன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோ கமலநாதன், சிகாமாட்டில் டான்ஸ்ரீ இராமசாமி ஆகியோர் போட்டியிடுகிறார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் புனிதன் பெயர் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த தொகுதியை அம்னோ கோரி வருவதால் ம இகா வுக்கு வேறு தொகுதி கிடைக்குமா என்பது எந்த நேரத்திலும் தெரிய வரலாம்.

