
கெடா பாடாங் செராயில் எம். கருப்பையா, சுங்கை பூலோவில் வழக்கறிஞர் ஆர் சிவராசா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் பிரபல வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி போட்டியிடுகிறார்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மண்ணின் மைந்தர் என்று வர்ணிக்கப்படும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் மற்றும் பத்து நாடாளுமன்ற தொகுதியில் பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் ஜி. மணிவண்ணன், சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் யூனிஸ் வரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பேராக் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் போவது எஸ். கேசவனா அல்லது பிஎஸ்எம் கட்சி தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமாரா என்பது இன்றிரவு தெரிந்து விடும்.


