காஸாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறாத வரை பணயக் கைதிகளை விடுவிக்க மாட்டோம்- ஹமாஸ் உறுதி

இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேறி, இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் வரை பணயக் கைதிகள் எவரையும் விடுவிக்க சம்மதிக்க மாட்டோம் என்று பாலஸ்தீனக் குழுவான ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.

நிரந்தர போர் நிறுத்ததம் அமல் படுத்தப்பட வேண்டும், காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும், இடம்பெயர்ந்தவர்கள் இல்லம் திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும், மேலும் மனிதாபிமான உதவிகளை அப்பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை ஹமாஸ் விதித்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இதுவரை காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 33,800 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளதோடு 76,400 பேர் காயமடைந்துள்ளனர்.

reuters

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles