
மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அரச தந்திர உறவுகள் ஏற்பட்டு இவ்வாண்டுடன் ஐம்பது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இரு நாட்டு மக்களுக்கிடையிலான வருகை மற்றும் பரிமாற்றங்கள் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று சீனா மற்றும் வெளிநாடுகள் நட்புறவு சங்கத்தின் தலைவர் யாங் வான் வான் மிங் கூறினார்.
சீன சுற்றுப்பயணிகள் மத்தியில் மலேசியா பிரசித்தி பெற்ற இடமாக விளங்கி வரும் நிலையில் கோவிட்-19 பெருந்தொற்று க்கு முந்தைய ஆண்டான 2019 ஐ விட அதிகமான சுற்றுப்பயணிகளை நாடு இவ்வாண்டு ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை புரிந்த சீன சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 31 லட்சம் பேராக இருந்த வேளையில் இவ்வாண்டு இறுதிவாக்கில் அந்த எண்ணிக்கை 33 லட்சத்து 60 ஆயிரம் பேராக அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
bernama

