
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 17-
கோலகுபு பாரு தமிழ்ப் பள்ளிக்கு துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ இன்று காலை சிறப்பு வருகை புரிந்து பள்ளியின் நிலவரங்களை நேரில் கேட்டறிந்தார்.
நாடுதழுவிய நிலையில் அரசாங்க பள்ளிகள் அனைத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டு வரும் அதே வேளையில் இன்று உலுசிலாங்கூரில் அமைத்துள்ள கோல குபு பாரு தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்திருப்பதாக துணை அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு கொடுத்த மானியம்க்களை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே தாமும் கல்வி அமைச்சும் ஒவ்வொரு பள்ளியிலும் பார்வைவிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில் இன்று கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளிக்கு வந்திருப்பதாக அவர் கூறினார். இந்தப் பள்ளியின் மறு சீரமைப்பு பணிகளுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 70,000 வெள்ளியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்ட பள்ளி நிர்வாகத்தை துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ பாராட்டினார்.
இந்த ஆண்டும் 20,000 வெள்ளி வழங்கப்பட்டிருக்கும் வேளையில் பள்ளியின் கதவுகள் மற்றும் இதர சீரமைப்பு பணிகளுக்கு உதவ கூடுதலாக 20,000 வெள்ளி ஒதுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
முன்னதாக பள்ளிக்கு வருகை புரிந்த துணைக் கல்வி அமைச்சருக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பை வழங்கினார்.
வகுப்பறைகளுக்கு சென்ற துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ
மாணவர்களுடன் உரையாடிய வேளையில் பள்ளி நிர்வாகம் முன்வைத்த கோரிக்கைகளையும் மிக கவனமாக செவிமடுத்தார்.
தக்க தருணத்தில் பள்ளிக்கு வருகை புரிந்து உதவிகளை வழங்க முன் வந்திருக்கும் துணைக் கல்வி அமைச்சருக்கு பள்ளி நிர்வாக சார்பில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயமால்லிகா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
உலுசிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகள் உலுசிலாங்கூரில் நன்கு அறிமுகமானவரும் கொடைநெஞ்சருமான டத்தோ பி.எஸ். சாமி, உலுசிலாங்கூர் கவுன்சிலர் சின்னையா ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.

