ம இகா தேர்தல் குறித்துகட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பேசுகிறார்கள்!டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சாடல்

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஏப்ரல் 17-
மஇகா தேர்தல் குறித்து கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள் பேசுகின்றனர் என்று ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இன்று சாடினார்.

குறிப்பாக ஆதரவு கேட்டதாக கூறுகின்றார்கள். நான் யாரிடமும் சென்று ஆதரவு கேட்கவில்லை. கேட்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.

மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தான். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

இதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது என்றார்.

மஇகா கட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மற்ற பதவிகளுக்கு எல்லாம் போட்டியிருக்கலாம் என்று அவர் கோடி காட்டினார்.

வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ம இகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளுக்கு வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. தேர்தல் மே 4,5 ஆம் தேதிகளில் இடம் பெறும்.

ம இகா தொகுதிகளுக்கு மே 10,11 ஆம் தேதிகளில் வேட்புமனுவும் மே 17,18 ஆம் தேதிகளில் வாக்களிப்பும் நடைபெறும்.

ம இகா தேசிய துணை தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கான வேட்புமனுத் ஜூன் 22 ஆம் தேதியும் வாக்களிப்பு ஜூலை 6 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles