பி.ஜே.டி. லிங்க் நெடுஞ்சாலைத் திட்டம் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டது!

சர்ச்சைக்குரிய பெட்டாலிங் ஜெயா டிஸ்பர்சல் (பி.ஜே.டி.) இணைப்பு நெடுஞ்சாலைத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் இன்று அறிவித்தார்.

திட்ட மேம்பாட்டாளருடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதில்லை என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் முன்வைத்த அனைத்து முன் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் கால அவகாசம் கோரியதாகவும் எனினும் புத்ராஜெயா அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் அவர் சொன்னார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles