‘டைம்’ இதழின் 100 செல்வாக்காளரில் கோவையை பூர்விகமாக கொண்ட பேராசிரியர் பிரியம்வதா!

வாஷிங்டன்: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், ‘டைம்’ இதழின் உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கோவை மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பள்ளிப் படிப்பை டெல்லியின் ஆர்.கே.புரத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் முடித்தார். யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியர் ஆக பணிபுரிகிறார். மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதவியல் பாடங்களில் பட்டம் பெற்றுள்ளார்.

பின்னர் அவர் 1999-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அதோடு கருந்துளைகள் (Black holes) பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார். 2022-ம் ஆண்டு லிபர்டி அறிவியல் மையத்தின் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles