
ஷா ஆலம், ஏப்ரல் 21 – மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது தொடர்பாக, செகு பார்ட் என்று அழைக்கப்படும் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியாவின் (பெர்சாத்து) பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்.
இன்று ஒரு அறிக்கையில், மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் சைபுதீன் ஷாபி முஹம்மது, வரவிருக்கும் கோலா குபு பாரு இடைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே சுமத்தப் பட்டதாகக் கூறினார்.
சிலாங்கூர் மந்திரி புசார் ஒரு சந்தேகத்திற்குரிய நில பேரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து செகு பார்ட் அளித்த போலீஸ் புகாரை தான் படித்ததாக சைபுதீன் கூறினார்.
Selangor kini

