
ஷா ஆலம், ஏப் 22 – ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் புத்ரா ஜெயாவை பார்ட்டி கெஅடிலான் ராக்யாட் கட்சி (கெஅடிலான்) வழி நடத்தினாலும் சீர்திருத்தத்திற்காக போராடும் அதன் இலக்கில் கட்சி உறுதியாக இருக்க வேண்டும் என்று கட்சித் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி வலியுறுத்தினார்.
கட்சி உறுப்பினர்களிடையே மனநிறைவு கொள்ளும் போக்கிற்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அவர், மக்களின் நம்பிக்கை சிதைவதைத் தவிர்ப்பதற்கு “லவான் தெத்தாப் லவான்” (உறுதியாகப் போராடுவோம்) என்ற உணர்வை உருவாக்குவது முக்கியம் என நினைவூட்டினார்.
கட்சியை பலப்படுத்த முந்தைய ஆளும் கட்சி அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால் நாங்களும் அதையே செய்ய முடியாது. அரசு செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் நிதி வசூல் செய்தார்கள் என்றால் எங்களாலும் அதனைப் பின்பற்ற முடியாது. மாறாக, கட்சியை வளர்ப்பதற்கு நாங்கள் எங்கள் சொந்த பணத்திலிருந்து நிதி திரட்டினோம் என்று அவர் குறிப்பிட்டார்.
Selangor kini

