
லண்டன் ஏப்ரல் 22-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் 3-1 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் கிளப்பை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் வழி லிவர்பூல் 33 ஆட்டங்கள் முடிவில் 74 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அர்செனல் 74 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் 32 ஆட்டங்களை முடித்துள்ள மென் செமஸ்டர் சிட்டி 73 புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மென்செஸ்டர் சிட்டி கூடுதலாக ஒரு ஆட்டத்தை கையில் வைத்திருப்பதால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
bbc sports

