
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஏப்ரல் 23-
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வளாகத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் திருமுருகன் ஆலயத்தில் இன்று சித்திரா பௌர்ணமி விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பக்தர்கள் பால்குடங்கள் மற்றும் காவடிகளை ஏந்தி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
திருமுருகன் ஆலய தலைவர் டத்தோ சுரேஷ் தலைமையில் நடைபெற்ற சித்திரா பௌர்ணமி விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், தலைமை பொருளாளர் டான்ஸ்ரீ இராமசாமி உட்பட பலருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
ம இகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணனும் சித்திரா பௌர்ணமி திருவிழாவில் கலந்து கொண்டார்.

