
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 24-
நாட்டில்
24 மணி நேர உணவகங்களுக்கான உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை பிரெஸ்மா கடுமையாக நிராகரிக்கிறது என்று அதன் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தெரிவித்தார்.
உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 24 மணி நேரம் இயங்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
இதனால் எடை அதிகரிப்பு, தூக்கக் கலக்கம், செரிமானம் உட்பட இரவு நேர உணவுப் பழக்கத்தால் எதிர்மறையான விளைவுகள் இருப்பதாக பினாங்கு
பயனீட்டாளர் சங்கம் கூறியுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த டத்தோ ஜவஹர் அலி, சமூகத்தின் தேவைகள், இருப்பிடம், வாழ்க்கை முறைக்கு ஏற்ப மட்டுமே இந்த பரிந்துரை பொருத்தமானதாக இருக்கும்.
ஆனால் உணவகம், அனைத்து தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள பிரெஸ்மா உறுப்பினர்களின் வணிகச் செயல்பாட்டின் அடிப்படையில் 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்குமாறு பிரஸ்மா அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
நாட்டில் 24 மணி நேர உணவகங்கள் மக்களின் உடல்நிலை பிரச்சினைக்கு காரணம் அல்ல என்று அவர் சுட்டி காட்டினார்.

