52 ஆண்டு வரலாற்றில் சாதனை-கடந்தாண்டு 930,000 புத்தகங்களை சிலாங்கூர் பொது நூலக கழகம் இரவல் தந்தது

ஷா ஆலம், ஏப் 24 – சிலாங்கூர் பொது நூலக கழகத்தில் (பி.பி.ஏ.எஸ்.) கடந்தாண்டு இரவல் பெறப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 930,000 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 738,818 பிரதிகளாக இருந்தது.

கடந்த 2023 மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருவர் இரவல் பெறக்கூடிய புத்தகங்களின் அதிகப்பட்ச எண்ணிக்கை 10லிருந்து 20 ஆக அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரவல் பெறும் பிரதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டதாக இளைஞர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

கடந்தாண்டு இரவல் பெறப்பட்ட புத்தகங்களின் அளவு சிலாங்கூர் பொது நூலகத்தின் 52 ஆண்டு கால வரலாற்றில் மிக அதிகமானதாகும் என்றும் அவர் சொன்னார்.

Selangor kini

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles