ரவாங் தொகுதி சமூகச் சேவை மையத்தில் சமூக நலத்துறை சேவை திறப்பு!

ஷா ஆலம், ஏப் 24: மாதம் ஒருமுறை ரவாங் தொகுதியின் சேவை மையத்தில் சமூக நலத்துறை சேவை கவுண்டர் (ஜேகேஎம்) திறக்கப்படும்.
இந்த மாதத்திற்கான கவுண்டர் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் தெரிவித்தார்.

“இதில் ஏற்பாடு செய்யப்பட்ட சேவைகளில், ஜேகேஎம் வழங்கிய உதவிகளுக்கான விண்ணப்பங்கள் அல்லது அவற்றின் தொடர்பான தகவல்களைப் பற்றி விளக்குதல் ஆகியவை அடங்கும்.

“ரவாங்கிலிருந்து ஜேகேஎம் அலுவலகம் தொலைவில் அமைந்திருப்பதால், கோம்பாக் ஜேகேஎம்முடன் சந்திப்பு நடந்த போது, எனது வேண்டுகோளின்படி ஒவ்வொரு மாதமும் ஜேகேஎம் கவுண்டர் சேவை ரவாங் தொகுதியின் சேவை மையத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று சுவா வெய் கியாட் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles