
செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 24-
பேராக் லுமுட்டில் அரச மலேசிய கடற்படையின் (ஆர்.எம்.என்.) இரண்டு ஹெலிகாப்டர்கள் சம்பந்தப்பட்ட நெஞ்சை உலுக்கும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மைபிபிபி கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.
இந்த துயரச் சம்பவம் பெரும் வேதனையை அளிக்கிறது.
நாட்டை உலுக்கிய இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

