மூன்றாவது ஒத்திகையின் போது ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாயின!

அரச மலேசிய கடற்படைத் தளத்தில் விபத்துக்குள்ளான இரண்டு ஹெலிகாப்டர்கள் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெறத் திட்டமிடப்பட்ட கடற்படையின் திறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்றாவது முறையாக ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன.

இந்த விபத்தில் பேராக் மாநிலத்தின் லுமுட் மற்றும் சபா மாநிலத்தின் கோத்தா கினாபாலு ஆகிய தளங்களைச் சேர்ந்த 10 கடற்படை உறுப்பினர்கள் உயிரிழந்ததாக பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.

இரு கடற்படை ஹெலிகாப்டர்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய அரச மலேசிய கடற்படை ஒரு விசாரணை வாரியத்தை அமைக்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles