
“ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்த காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமரை விடவும் மேலானவர்களாக கருதுகிறார்கள்.
ஆனால் நாங்கள் ஏழைகள், பெண்கள், விவசாயிகள் நலனே முன்னுரிமை” என்று பிரதமர் மோடி பேசினார்.
காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்ப கூறி வருகிறார்கள்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு, அரசமைப்பை மாற்றிவிடும் என காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது.
எவ்வளவு காலம்தான் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?
அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள் நலனே எங்கள் முன்னுரிமை என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசினார்
தி இந்து தமிழ்

