தெலுக் இந்தானில் மூன்று கோவில்களுக்கு மானியம் வழங்கினார் சிவநேசன்!

செ.வே. முத்தமிழ் மன்னன்

தெலுக் இந்தான், ஏப்ரல் 24-
சித்திரா பௌர்ணமி திருவிழா நேற்று தெலுக் இந்தானில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சித்திரா பௌர்ணமி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் மற்றும் பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினரும் மாநில குழு உறுப்பினருமான வூ கா லியோங் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

தெலுக் இந்தான் நாகமுத்து மாரியம்பிகை கோவிலுக்கு 40,000 வெள்ளி மானியம், தெலுக் இந்தான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 30,000 வெள்ளி மானியம் மற்றும் ஹிலிர் பேராக் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு 20,000 வெளிளியை சிவநேசன் வழங்கினார்.

மானியம் பெற்றுக் கொண்ட ஆலய நிர்வாகத்தினர் பேராக் மாநில அரசு மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles