
சித்தியவான் ஏப்ரல் 24-
பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் நேற்று சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு பேராக் சித்தியவான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்தார்.
புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாம் மற்றும் அவரின் சிறப்பு இந்திய அதிகாரி தினகரன் ஆகியோரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
பேராக் மாநில அரசு சார்பில் சித்தியவான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு 80 ஆயிரம் வெள்ளி காசோலையை வழங்கினார்.
மேலும் ஆலயத்திற்கு நிலப்பட்ட உரிமையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் வால்புரோக் ஸ்ரீ நாக கன்னி ஆலயத்திற்கும் நிலப்பட்டா வழங்கப்பட்டது.
ஆயர் தாவார் கிருஷ்ணர் ஆலயத்திற்கு 30 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

