
மா.பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 25-
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு மேல் பத்தாங் காலியில் சித்திரை புத்தாண்டு கலைவிழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
டேவான் ஓராங் ராமாய் மண்டபத்தில் நடக்கும் இந்த கலை விழாவில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு, உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராயர், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், செனட்டர் லிங்கேஸ்வரன் மற்றும் பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.