லண்டன் ஏப்ரல் 25-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் கிளப் 0-2 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் கிளப்பிடம் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டது.
இதுவரை 34 ஆட்டங்கள் முடிவில் லிவர்பூல் 74 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
32 ஆட்டங்களை முடித்துள்ள மென் செஸ்டர் சிட்டி 73 புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதனிடையே நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய அர்செனல் 5-0 என்ற கோல் கணக்கில் செல்சியை பந்தாடியது.
இதுவரை 34 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 77 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.