உலு சிலாங்கூர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம் வழங்கினார்மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி !

காளிதாஸ் சுப்ரமணியம்

பத்தாங் காலி ஏப்ரல் 25-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் 324 மாணவர்களுக்கு இன்று தலா 300 வெள்ளி இலவச பேருந்து கட்டணமாக வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு ஆகியோர் இன்று மாணவர்களுக்கு இந்த பற்று சீட்டுகளை எடுத்து வழங்கினர்.

பத்தாங் காலி சமூக மண்டபத்தில் இன்று மாலையில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு நேரடியாக இந்த பற்று சீட்டுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாங் காலி தமிழ்ப் பள்ளியைப் சேர்ந்த 32 மாணவர்கள்,சங்காட் ஆசா தமிழ்ப் பள்ளியை சேர்ந்த 27 மாணவர்கள், எஸ்கோட் தமிழ்ப் பள்ளியை சேர்ந்த 28 மாணவர்கள், கோலகுபு பாரு தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள், கெர்லிங் தமிழ்ப் பள்ளியைப் சேர்ந்த 60 மாணவர்கள்,களும்பாங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 62 மாணவர்கள், லீமா பெலாஸ் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த. 5 மாணவர்கள், சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் புக்கிட் பெருந்தோங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள் இந்த தலா 300 வெள்ளி பற்றுச் சீட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

ஆக மொத்தம் 324 மாணவர்களுக்கு 97 ஆயிரத்து 200 வெள்ளி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles